Showing posts with label தொழில் நுட்பம். Show all posts
Showing posts with label தொழில் நுட்பம். Show all posts

Friday, September 27, 2013

ANDROID APPS ஐ நம் கணிப்பொறியில் இயக்குவது எப்படி ?

இன்று மிகவும் பிரபலமான மொபைல் இயங்குதளம் "ANDROID" ஆகும் .இதன் முக்கிய  சிறப்பு அம்சம் தொடு திரையில் இதனை இயக்குவது மேலும் எண்ணற்ற மென்பொருள்கள் இலவசமாக கிடைப்பது இதன் பலத்தை மேலும் அதிகப்படுத்துகிறது 
அப்படி பட்ட "ANDROID" இயங்குதளத்தை மொபைல் போனில் மட்டும் தான் இயக்கமுடியுமா ? நமது கணிப்பொறியில் இயக்கமுடியாத என குழப்பத்தில் இருப்பவருக்காக இப்பதிவை சமர்பிக்கிறேன் 

முதலில் இங்கு சென்று" DOWNLOAD" கிளிக் செய்ததும் கிழே உள்ளது போன்று விண்டோஸ் தோன்றும் 


அதில் எந்த இயங்குதளத்தை நாம் பயன் படுத்துகிறோம் உதராணமாக விண்டோஸ் இயங்குதளம் என்றால் விண்டோஸ் என்பதை கிளிக் செய்ய வேண்டும் மேக் இயங்குதளம் என்றால் மேக் என்பதனை தேர்வு செய்து கொள்ளவேண்டும் இங்கு நாம் பெரும்பாலம் பயன்படுத்தப்படும் இயங்குதளம் விண்டோஸ் என்பதால் விண்டோஸ் ஐ தேர்வு செய்துள்ளேன் 
அடுத்தபடியாக இந்த மென்பொருள் ஆனது பகுதி பகுதியாக நிறுவ வேண்டும் முதல் பகுதி நிறுவப்பட்டதும் அடுத்தது தானாக நிறுவிக்கொள்ளும் .
இவ்வாறு நிறுவப்படுவதிற்கு காரணம் நமது கணிப்பொறி யானது இந்த மென்பொருளை இயக்க வல்லதா என்று சோதனை செய்த பிறகே நிறுவப்படும் 
சோதனைக்கு பிறகு கிழே உள்ளது போன்று விண்டோ வானது தோன்றும்
அதில் நமக்கு பிடித்த மென்பொருளை எப்படி மொபைல் யில் இயக்குகின்றோமோ அதே போன்றே விண்டோஸ் இல் இயக்கமுடியும்  
ஒரு வழிய இன்ஸ்டால் பண்ணியாச்சி இப்போ கொஞ்ச விளையாடி தான் பாக்கலாமே !!!
ANDROID GAMES லேயே மிகவும் பிரபலமானது "TEMPLE RUN" இதை விளையாடதவர்களே இருக்க முடியாது அதை நம் கணிப்பொறியில் விளையாடுவோம் 

நிங்களும் இனி கணினியில் உங்களுக்கு புடிச்ச ANDROID APPS நிறுவி விளையாடுங்க !!!
குறிப்பு :இதை நிறுவ உங்கள் கணினியில் கிராபிக்ஸ் கார்டு 512 MB ஆவது இருக்க வேண்டும் 

மீண்டும் அடுத்த INTERESTING  பதிவோடு உங்களை சந்திக்கிறேன் மறக்காம உங்கள் கருத்துகளையும் ஆதருவினையும் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் 
என்றும் அன்புடன் ,
   INVISIBLE TECHNICAL VIOLENCE


Thursday, September 26, 2013

 பதிவுகளை சுலபமாக தமிழில் தட்டச்செய்ய "GOOGLE INPUT TOOL " மென்பொருள் 



என் இனிய தமிழ் ப்ளாக் நண்பர்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.இன்று நாம் தெரிந்து கொள்ள இருக்கும் மென்பொருள் GOOGLE INPUT TOOL தமிழ் பதிவுகளை பல முறைகளில் தட்டச்சு செய்யலாம் அவைகள் பின்வருமாறு

1.ஆன்லைன் GOOGLE TRANSLATOR மூலமாக
2.TAMIL FONT ஐ INSTALL செய்வதன் மூலமாக

இவ்வாறு நமக்கு தெரியும் வழி முறைகளை நாம் கையாளுகின்றோம்.இதில் மிகவும் சுலபமாக "OFFLINE " இல் தட்டச்சு செய்வது எப்படி  என்பது தான் இப்பதிவின் சுருக்கம்

முதலில் இங்கு சென்று மென்பொருளை   DOWNLOAD செய்து கொள்ளவும் 

டவுன்லோட் என்பதனை கிளிக் செய்ததும் கிழே காண்பது போன்று விண்டோ தோன்றும் அதில் "TRY IT OUT" என்பதை கிளிக் செய்யவோம் 


அடுத்த படியாக தோன்றும் விண்டோ வில் நமக்கு எப்படி வேண்டும் இந்த மென்பொருள் உதாரணமாக,
1. GOOGLE CHROME இல் வேண்டும் என்றால் "INSTALL THE CHROME EXTENSION" என்பதனை கிளிக் செய்யவேண்டும் 
2.அடுத்தது ANDROID USER காக ஸ்மார்ட் போனில் தரவிறக்கம் செய்ய 
3.கடைசியாக உள்ள "DOWNLOAD FOR WINDOWS" என்பதனை கிளிக் செய்ததும் 


 கிழே தோன்றும் விண்டோ வில் நம் விருப்பமான மொழியை தேர்வு செய்து தட்டச்சு செய்யலாம் இங்கு நாம் தமிழில் எப்படி தட்டச்சு செய்வது என்பதற்காக தமிழ் மொழியை தேர்வு செய்து கொள்கிறோம்

பதிவிறக்கம் செய்த பிறகு மென்பொருளை INSTALL செய்யவோம்

குறிப்பு :-SHIFT+LEFT ALT அழுத்துவதன் மூலமாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எந்த மொழியில் வேண்டுமோ மாற்றி   கொள்ளலாம் 


நீங்களும் பயன்படுத்தி மற்றவர்களுக்கும் தெரிய படுத்தி மகிழ்வோம் 
நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவுயை பகிர்வதால் உங்கள் கருத்துக்களையும் ஆதருவினையும் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் !!!
என்றும் அன்புடன் ,
   INVISIBLE TECHNICAL VIOLENCE

Friday, February 26, 2010

போட்டோகளை DVD பிளேயர் யில் slide show ஆக பார்ப்பது எப்படி?


நாம் படங்களை DVD பிளேயர் யில் போட்டு பார்ப்போம் . அது மிகவும் எளிது .
ஆனால் போட்டோ களை பிளேயர் யில் போட்டு பார்க்க வேண்டும் என்று ஆசை நமக்கு இருக்கும் அதை எவ்வாறு பார்ப்பது என்றுபார்ப்போம் .










முதலில் இந்த மென்பொருளை இங்கு சென்று DOWNLOAD செய்யவும் .இது ஒரு இலவசமான மென்பொருள் என்பதால் எவ்வளவு போடோக்களை வேண்டுமானாலும் slide show செய்ய முடியும் .



















இந்த மென்பொருளை பயன்படுத்தி போடோக்களுக்கு 
பின்புற இசையை உருவாக்கலாம் 





பின்புற தீம்ஸ் ஐ உருவாக்கலாம் 





நமக்கு தேவையான format மாற்ற முடியும் .


 அறிந்து கொள்க 

நம் கணினி இயங்க ஆரம்பிக்கும் போதுகணினியில் உள்ள அனைத்து கேபிள் இணைப்புகளும் 
சரியாக இணைக்க பட்டு உள்ளதா 
என்று தானாகவே check செய்யும் program க்கு POST ( Power On Self Test ) என்று பெயர் 



Wednesday, February 24, 2010

அறிந்து கொள்வதற்காக ....


நான் பதிவு எழுதி சும்மார் 1 மாதத்துக்கு மேலே ஆகின்றது . ஏன் னு கேட்கறிங்க அல்லவா! அது ஒரு பெரிய கதை நான் அதை வேறு பதிவுல சொல்றன் பா! 

இனி எனது பதிவுக்கு தாமதம் ஆகாது .என்பதை மட்டும் இப்போ தெரிவித்து கொள்கிறேன் பா .

நான் இப்போ என்னா தான் சொல்ல வரன்னு கேட்கறிங்க அல்லவா! சின்னதா ஓரு பஞ்ச் யாரும் வருத்த பட கூடாது சரியா" I AM BACK "NU சொல்ல வந்தன் பா! 

சரி இந்த பதிவுல இருந்து நான் எனக்கு தெரிஞ்ச சின்ன சின்ன செய்தியை "அறிந்து கொள்ள" என்னும் தலைப்பில் சொல்ல  போறன்

 இந்த ஐடியா வை நான் பாண்டி அண்ணன் கிட்ட இருந்து தெரிஞ்சிக்கிட்டேன் (நன்றி பாண்டி அண்ணா!!!)  அப்போ மெயின் பதிவு எப்படி னு கேட்கறிங்களா ....

அது இனிமேல சரவெடி தான் .........

                                                                   அறிந்து கொள்ள...

கீ போர்டில் மொத்தம் 6 வரிசைகளை கொண்டுள்ளது அதில் 3 ஆவது வரிசையில்  மட்டும் கீ போர்டுடன் சம்மந்த மான வாக்கியம் உள்ளது அது என்ன தெரியும்மா !! அதாங்க TYPE WRITTER    (பெரிய கண்டுபிடிப்பு இது... )

Saturday, December 5, 2009

text ஐ மொபைல் ringtone ஆக வைப்பது எப்படி?

இந்த தளத்தில் உங்கள் mobile க்கு ஏற்ற screen saver , themes , voice , wallpaper போன்றவற்றை உங்கள் விருப்பதற்கு ஏற்ப உருவாக்கலாம் .அதற்கு நீங்கள் முதலில் sign up செய்ய வேண்டும் . 


மேலும் மொபைல்க்கு தேவையானscreen saver , themes , software போன்றவற்றை download லும் செய்யலாம் . இந்த பதிவில் ringtone ஐ எவ்வாறு நமக்கு ஏற்றவாறு உருவாக்குவது என்று பார்போம் .



நாம் பெரும்பாலும் பாடலின் வரிகளை தான் ringtone ஆக வைப்போம் .இதில் நாம் டைப் செய்யும் டெக்ஸ்ட் ஐ எவ்வாறு ringtone ஆக வைப்பது என்பதை பார்போம் .


இங்கு சென்று உங்கள் ரிங் டோனை உருவாக்குங்கள் . 
கீழே உள்ள படத்தை பாருங்கள் ,





நாம் ஒரு நீண்ட வாக்கியம் டைப் செய்து , அதை male ( அல் ) female , வாய்ஸ் 
மூலம் ஒலிக்கச் செய்யலாம் , மேலும் இந்த வரிகளை ஒலிக்கச் செய்யும் போது 
அந்த வாய்ஸ்ன் முதலிலும் நடுவிலும் பிறகு அதன் முடிவிலும் தேவையான 
மியூசிக் ஒலிக்கச் செய்வதன் மூலம் அதை மேலும் மெருகூட்டலாம் , 



இதனால் இதனை கேட்கும் போது மிக அழகான ஒரு ரிங் டோன் நமக்கு 
கிடைக்கும் .                                       


இப்போது , நீங்கள் உருவாக்கிய ரிங் டோனை ஒலிக்கச்செய்து பாருங்கள் , சரியா வந்திருந்தால் அதனை டவுன் லோடு செய்து பயன்படுத்தலாம் 





தாமதமான பதிவிற்கு வருந்துகிறேன் ,  



உங்கள் ரிங் டோனை கேட்டுக் கொண்டே ஒரு கருத்தையும் + ஓட்டையும் 
போட்டால் மிக மகிழ்ச்சி அடைவேன், 





Thursday, October 29, 2009

பென் டிரைவ் மூலம் கணினிக்கு வைரஸ் வராமல் தடுக்க .




நமது கணினியில் நம்மை பயமுறுத்தும் விஷயம் வைரஸ் ,
இது இரண்டு வகைகளில் வருகிறது ,

1 ) internet மூலம்
2 ) pendrive மூலம்

இதில் pendrive இல் நாம் pendrive வை நமது கணினியில் போடும் போது,
அது autorun ஆகும் , இதனால் வைரஸ் பரவும் அபாயம் உண்டு , மேலும் ,

சில நேரங்களில் நாம் eject செய்யும் போது அல்லது format செய்யும் போது ,
அது ஆகாமல் போகலாம் ,

அந்த நேரங்களில் தான் இந்த சாப்ட்வேர் நமக்கு உதவுகிறது , முதலில் இங்கு
சென்று இதை download செய்யவும் ,

பிறகு ரன் செய்து All programs சென்று அதில் நாம் run செய்த software இல்
சென்று ஒரு sortcut ஐகானை , நமது டெஸ்க் டாப்பில் வர வைத்து விடவும் ,

பிறகு, அதை ஓபன் செய்தால் கீழே இருப்பது போல் வரும் ,


அதில் , My computer என்று இருப்பதில் டபுள் கிளிக் செய்து ,

Autoplay > drivers > click செய்தால் கீழே உள்ளது போல் வரும் ,


இதில் , pendrive போடும் drive இல் படத்தில் உள்ளது போல் டிக் செய்யப் பட்டு
இருக்கும் , அதை எடுத்து விடவும் , கீழே உள்ள படத்தை பார்க்க,




பிறகு ok செய்து வெளியில் வரவும் ,

இப்போது உங்கள் pendrive போட்டவுடன் அது auto run ஆகாமல் இருக்கும் ,
இதன் மூலமும் வைரஸ் பரவாமல் தடுக்கலாம் ,


பதிவிற்கு ஆதரவு தந்து வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ,

நன்றி ,

Monday, October 26, 2009

ஒரே சொடுக்கில் internet குக்கீஸ் அழிக்க - free software ..


நாம் பயன்படுத்தும் internet explore மெதுவாக இயங்குவதற்கு
காரணம் cookies தான் அதனை அழிப்பதற்கு start >run >%TEMP%
இதில் சென்று தான் அழிப்பார்கள்,

clean quick என்பதனை க்ளிக் செய்ததும் உங்கள் கணிபொறியில்
உள்ள cookies எல்லாம் clean செய்யப்படுகிறது
இன்னும் சில பேர் c - cleaner ஐ பயன்படுத்தியும் அழிப்பார்கள்
c - cleaner ஐ விட அதிவேகத்தில் cookies களை அழிக்கும்
மற்றும் இது இன்னும் அதிகமான பயன்பாடுகளை
கொண்டது.



இதன் முலமாக நம் கணிபொறியும் வேகமாக செயல்படும்
பயன்படுத்தி பாருங்கள் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்


down load

பிடித்திருந்தால் ஒட்டு அளித்து ஆதருவு தாருங்கள்

Friday, October 23, 2009

வெளி நாடுகளின் ISD coad நம்பர்களை மொபைல் மூலம் கண்டுபிடிக்க

நாம் போன் செய்யும் போது அதனுடைய code எண் சேர்த்து தான் டயல்
செய்வோம் ,

உதாரணமாக இந்தியா விற்கு +91 என்ற எண் இருப்பது போல ஒவ்வொரு
நாட்டுக்கும் , ஒரு எண் இருக்கும் ,

இந்த சாப்ட்வேர் ஐ நாம் உபயோகப்படுத்துவதன் மூலம் எந்த நாட்டுக்கு
என்ன எண் ? என்பதை கண்டுபிடிக்கலாம் ,

முதலில் இந்த சாப்ட்வேர் ஐ இங்கு சென்று download செய்யவும் , பிறகு
இந்த software ஐ நமது மொபைலுக்கு டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும் ,

பிறகு , இது application ஆக நமது மொபைலில் தோன்றும் , அதில் எதாவது
ஒரு 9 இலக்க எண்ணை கொடுத்து serch செய்ய வேண்டும் ,

உதாரணமாக , நமது cell phone எண்ணை எடுத்துக்கொள்ளுங்கள் , இதை பதிவு
செய்து பிறகு serch செய்யவும் ,

முதல் இரண்டு எண்களை மட்டும் எடுத்துக் கொண்டு அது எந்த நாட்டுக்கு என
சொல்லி விடும் ,

பயன் படுத்திப் பாருங்கள் ,

Thursday, October 22, 2009

அதிசய வேகம் காட்டும் - flock browser

நாம் எத்தனையோ browser களை இதுவரை பார்த்திருப்போம் ,

சிலவற்றை உபயோகப் படுத்தி இருப்போம் !! ஆனால் இந்த
browser மற்றதை விட மிகச் சிறந்த அனைத்து பயன்பாடுகளையும்
உள்ளடக்கிய browser ,

இதில் இருந்து நேரடியாக facebook , gmail ,yahoomail , மற்றும் youtube
போன்ற பல தளங்களுக்கு எளிதில் செல்ல முடியும்,





மேலும் இதன் மூலம் blogger home -க்கும் செல்ல முடியும் .

down load

பயன் படுத்தி பாருங்கள் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் ,

Wednesday, October 21, 2009

நீங்கள் பிறந்து எத்தனை நாட்கள் ஆகி உள்ளது? என்பதை அறிந்து கொள்வதற்கான மினி மொபைல் software

நம்மால் நாம் எப்போது பிறந்தோம்,
எந்த வருடத்தில் பிறந்தோம், என்பதை கூற
முடியும்,

ஆனால் நாம் பிறந்து எத்தனை நாட்கள் ஆகி
உள்ளது என்பதனை கூற முடியுமா ?
அது கடினம்தான் அல்லவா!


அதற்கான software இங்கே உள்ளது .
முதலில் இந்த software ஐ டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் ,

பிறகு இதை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி
பாருங்கள்.

கொஞ்சம் try ! பண்ணிதான் பாருங்க.



பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளித்து ஆதரவு தரவும் .

Sunday, October 18, 2009

computer - ஐ சிறுவர்களுக்காக மாற்றும் software ....


நம்மைப் போன்றே நம் கம்ப்யூடரை குழந்தைகள் பயன்படுத்த
வேண்டுமென ஆசை ஏற்ப்படும் ஆனால்,

குழைந்தைகள் தேவையற்றவற்றை key board இல் தட்டினால் பாதிப்பு
நமக்குத் தான் உதாரணமாக பைல்கள் டெலிட் ஆகலாம் , நிறைய
விண்டோஸ் ஓபன் ஆகலாம் ,

இதனை எல்லாம் தடுப்பதற்கும் நம் குழைந்தைகள் கம்ப்யூடரை பயன்
படுத்துவதற்கான சாப்ட்வேர் இங்கு உள்ளது , இது 30 நாட்களுக்கான trial pack
மட்டுமே , அதில் administrator, guardian மற்றும் guest என கொடுக்கப் பட்டிருக்கும் ,

admin , guardian - என்பதற்கு password கொடுத்து lock செய்யலாம் guest என்பது
குழைந்தைகள் பயன்படுத்துவதற்கு அதற்கு password தேவை இல்லை ,

guest இன் உள் குழைந்தைகள் games , drawing audios videos photos போன்றவைகளை பயன்படுத்தலாம் மேலும் இதில் குழைந்தைகள் எவ்வளவு நேரம் பயன்படுத்த
வேண்டும் என டைம் செட் செய்யலாம் ,

இதனால் அவர்களின் படிக்கும் நேரம் பாதிக்காமல் இருக்கும். உபயோகப் படுத்தி
பாருங்கள் ,

பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளித்து ஆதரவு தரவும் .

Monday, October 12, 2009

தேவையற்ற error reporting - தடுப்பது எப்படி ?


அன்புள்ள வலைத் தள நண்பர்களுக்கு ,

இது எனது முதல் பதிவு ,

இந்த பதிவில் நமது கணினியில் நாம் வேலை செய்து கொண்டு
இருக்கும் போது, அடிக்கடி error reporting கேட்டுக் கொண்டே இருக்கும் ,
அதை எப்படி சரி செய்வது என பார்ப்போம் ,

இந்த error reporting கேட்டு சில சமயம் system restart கூட ஆகும் ,
மேலும் நம் பயன் பாட்டில் உள்ள internet - இல் இது போல் அடிக்கடி
வரும் , அப்படி வரும் போது நாம் சில சமயம் don 't send - எனக் கொடுத்து
விடுவோம் ,

மீண்டும் மீண்டும் அதேபோல் வரும் போது , நமக்கு எரிச்சல் தான்
வரும் அப்படிப் பட்ட நேரத்தில் , இது உங்களுக்கு உபயோகப்படும் ,

முதலில் , My computter , சென்று அதன் property செல்லவும் , உங்களுக்கு
கிழ் கண்ட வாறு open ஆகும் ,




அதில் , குறிப்பிட்டுள்ளது போல் advance என்ற option தேர்வு செய்யவும் ,



இதில் மார்க் செய்யப்பட்டுள்ள படி Error Reporting என்பதை தேர்வு
செய்யவும் ,

அடுத்த படத்தில் காண்பிக்கப் பட்டுள்ள படி Error reporting - enable இல்
இருக்கும் அதை

படத்தில் இருப்பது போல் Disable error reporting என்பதில் தேர்வு செய்து ,
பிறகு ok கொடுக்கவும் ,


இனி மேல் தேவையற்ற error report கேட்காது . அதே போல் சிஸ்டம்
restart ஆகாது ,

பதிவு பற்றி உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் , பிடித்திருந்தால்
ஒட்டு போட்டு ஊக்குவிக்கவும் , நன்றி .
Entitled Document